காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் : நள்ளிரவிலும் மக்கள் பணியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் : நள்ளிரவிலும் மக்கள் பணியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர்

காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காவத்தமுனை, தியாவட்டவான் மற்றும் மஜ்மா நகர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், நேற்றையதினம் (25) நள்ளிரவில் காவத்தமுனையில் மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் திடீரென நுழைந்த காட்டு யானைக் கூட்டத்தை விரட்டும் பணிகள் கல்குடா அனர்த்த அவசர சேவைப் பிரிவினராலும், அகீல் எமேர்ஜன்சி மற்றும் பொதுமக்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, உடனடியாக களத்திற்கு வருகை தந்த ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் குறித்த தரப்பினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டார்.

தொடந்தும் பொதுமக்கள், கல்குடா அனர்த்த அவசர சேவைப் பிரிவினர், அகீல் எமேர்ஜன்சி அங்கத்தவர்களுடன் கலந்துரையாடிய தவிசாளர் தற்போது வேளாண்மை அறுவடை காலம் ஆரம்பித்துள்ளதால் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்தேர்ச்சியாக இருக்குமெனவும் அதற்கான முன்னாயத்த முயற்சிகளை மேற்கொள்வது தவிசாளர் என்ற வகையில் தனது தார்மீகக் கடமையெனவும் கருத்துத் தெரிவித்தார்.

அத்தோடு முதற்கட்டமாக ஒரு தொகுதி யானை வெடில்கள் யானை விரட்டும் பணியில் ஈடுபடும் குழுவினருக்கு தவிசாளரால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், காட்டு யானைகளை விரட்டும் பணிக்கு உதவும் நோக்கில் பிரதேச சபையூடாக வாகன வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும் எந்நேரத்திலும் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புக்குள் நுழைகின்றபோது தன்னையோ அல்லது இப்பணியில் ஈடுபடும் குழுவினரையோ அழைக்குமாறு பொதுமக்களை வேண்டிக் கொண்டார் தவிசாளர்.

No comments:

Post a Comment