மூதூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு : பெரும்பகுதி சேதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

மூதூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு : பெரும்பகுதி சேதம்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (26) பகல் இடம்பெற்றது.

வீட்டு உரிமையாளர்கள் பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். குளித்து விட்டு வீடு வந்து பார்த்தபோது வீடு தீப்பற்றி எரிவதை கண்டுள்ளனர்.

இதன் பின்னர் வீட்டு உரிமையாளர்களும், வீதியால் பயணித்த பொதுமக்களும் இணைந்து தீயினை கட்டுப்படுத்த முனைந்தபோதும் வீட்டின் பெரும்பகுதி தீயினால் தீக்கிரையாகியுள்ளது.

அத்தோடு வீட்டில் காணப்பட்ட குளிர்சாதனப்பெட்டி, மின்சார உபகரணங்கள், வீட்டுத்தளபாடங்கள், சுய கோவைகள் என்பனவும் தீயினால் சேதமாகியுள்ளன.

இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டதென இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கிண்ணியா கியாஸ்

No comments:

Post a Comment