ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 25 OTT தளங்களுக்கு தடை : பொதுமக்கள் அணுக முடியாத வகையில் முடக்குமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 25 OTT தளங்களுக்கு தடை : பொதுமக்கள் அணுக முடியாத வகையில் முடக்குமாறு உத்தரவு

ஆபாச, அநாகரிக உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 OTT தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த வலைத்தளங்களை பொதுமக்கள் அணுக முடியாத வகையில் அவற்றை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்திய மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, சட்ட விவகாரத்துறை, எப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற தொழில் அமைப்புகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு சட்ட விதிகளை மீறியதற்காகவும் இவை தடை செய்யப்பட்டுள்ளன. 

தடை செய்யப்பட்ட தளங்கள் பட்டியலில் ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App, MoodX, NeonX VIP, Fugi, Mojflix, Triflicks உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment