பொம்மைக்குள் போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்த யுவதி கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

பொம்மைக்குள் போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்த யுவதி கைது

கம்பஹாவில் சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜபக்ஷபுர பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் உள்ள அறையில் பொம்மைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களுடன் யுவதி ஒருவர் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஆவார்.

குறித்த விடுதியில் பொலிஸார் சோதனை செய்துகொண்டிருந்தபோது அங்குள்ள அறையில் தங்கியிருந்த சந்தேகநபரான யுவதி பொம்மை ஒன்றுடன் வெளியே செல்வதை பொலிஸார் கண்டுள்ளனர். சந்தேகமடைந்த பொலிஸார் யுவதியை வழிமறித்து பொம்மையை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது பொம்மைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 21 கிராம் கஞ்சா போதைப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேகநபரான யுவதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment