நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிற்கு உள்ளாகிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கின் தீர்ப்பு இன்று (24) அறிவிக்கப்படவிருந்த நிலையில், உயர் நீதிமன்றம் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இலத்திரனியல் வீசா விநியோக நடைமுறைகள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமை தொடர்பான வழக்கில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார்.
இதன் மூலம் அவர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வழக்கு கடந்த 01 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எவ்வித நிபந்தனைகளுமின்றி தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்தார்.
இதனையடுத்து, இது தொடர்பான தீர்ப்பு இன்று (24) அறிவிக்கப்படவிருந்த நிலையிலேயே நீதிமன்றம் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment