மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தர தெற்கு, குடாதெனியா வீதியில் அமைந்துள்ள வீட்டில், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் உதவியாளர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டார்.
நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 58 வயதுடைய இந்த நபர் 265 கிராம் ஹெரோயின் மற்றும் 250 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாலபே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் மாலபே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment