கால்வாய் ஒன்றில் இருந்து 4 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பேகுதியில் உள்ள கால்வாயிலேயே குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26) சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில் தனது மகளுக்கு ஆடைகளை அணிவித்து தயார் நிலையில் வைத்து விட்டு, சிறுமியின் தாய் தயாரகி விட்டு சிறுமியை தேடிய வேளையில், குழந்தை வீட்டில் இல்லாத நிலையில் அக்கம்பக்கத்தினருடன் இணைந்து தேடியுள்ளார்.
குறித்த சிறுமி சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீரை கொண்டு செல்லும் கால்வாயில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் பற்றை பகுதியில் சிக்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நான்கு வயது சிறுமி வீட்டின் அருகாமையில் இருந்த கால்வாயில் தவறுதலாக வீழ்ந்து நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாமென் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொட்டகலை, ரொசிட்டா தோட்டத்தை சேர்ந்த நான்கு வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
சிறுமியின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஷ்
No comments:
Post a Comment