முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் மீதான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று (18) காலை அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment