டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 1, 2025

டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் வெளியீடு

சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற நூல் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வானது எதிர்வரும் 09.05.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பி.ப. 4.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள 'ஜெஸ்மின்' அரங்கில் நடைபெறவுள்ளது.

அப்றார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூஸூப் கலந்துகொள்வதுடன், சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா கௌரவ அதிதியாகவும், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அல்ஹாஜ் அஸாத் சாலியும் கலந்துகொள்வார்கள்.

நூல் பற்றிய கருத்துரையை ஆசிரியையும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி சுமையா ஷரிப்தீன் வழங்க ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் 'நூல் கடந்த நோக்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

பதிலுரைகளை டாக்டர் ஷாபி சிகாப்தீன், நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்துவார்கள். வரவேற்புரையை செல்வி ஸெய்னப் ஷாபி நிகழ்த்துவார். திருமதி ஆஷிகா பர்ஸான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

இம்றான் நெய்னார்

No comments:

Post a Comment