எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர் செல்வம், தோல்விப் பயத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுதாகவும் தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று (03) நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நேற்றையதினம், ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வித்தியாசமான செய்திகள் வெளியாகி இருப்பதாலும், அவற்றை வைத்து சிலர் எமக்கு எதிரான பொய்யான அவதூறுகளை பரப்புவதும் அவதானிக்கப்படுவதால், உண்மையில் என்ன நடந்தது என்பது எமது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
உண்மையிலேயே குறித்த பகுதியில் எமது கட்சியின் ஆதரவாளர் ஒருவரின வீட்டில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தார்.
அதன்போது, எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக கடந்த காலங்களில் செயற்பட்ட இருவர், நிறை மதுபோதையில் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் எமது செயலாளர் நாயத்தினை நெருங்கிச் சென்று கதைப்பதற்கு முயற்சித்த போதிலும் அங்கிருந்தவர்களினால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கூட்டத்தினை நிறைவு செய்துகொண்டு செயலாளர் நாயகம் புறப்படத் தயாரானபோது, மதுபோதையில் இருந்தவர்களுள் ஒருவர், எமது வாகனம் செல்வதற்கான வீதியில் தடையை ஏற்படுத்தும் நோக்கில் வீதியால் சென்ற உழவு இயந்திரத்திற்கு குறுக்காக விழுந்து படுத்துக் கொண்டார். அதன்போது அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றோம்.
இந்நிலையில் அங்கிருந்தவர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து அவரை அப்புறப்படுத்தி உழவு இயந்திரத்தினை அனுப்பி வைத்ததை தொடர்ந்து, செயலாளர் நாயகத்தின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டது.
அதன் பின்னர் மதுபோதையில் இருந்ந 2 ஆவது நபர், எமது கூட்டம் நடாத்தப்பட்ட வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்மணியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஊரவர்கள் குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொணட நிலையில், பொலிஸார் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியவரை கைது செய்துள்ளதுடன், உழவு இயந்திரத்தின் குறுக்கே படுத்து காயம் ஏற்படுத்திக் கொண்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை.
இந்த சம்பவமானது திட்டமிட்ட முறையில் எமக்கு அவப்பெயரை ஏற்படுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட சம்பவமாகவே பார்க்கின்றோம்.
எமது வெற்றி வாய்ப்பை தடுப்பதற்கு அனைத்து சூழ்ச்சிகளையும் அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகின்றவர்கள், ஊர்காற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி எளிதாக கைப்பற்றும் என்பதை உணர்ந்து கொண்டுள்ள நிலையில், வெற்றியை தடுப்பதற்கான முயற்சியாக இந்த சூழ்ச்சியை முன்னெடுத்தபோதிலும், எமது தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சகிப்புத்தன்மை, பொறுமை போன்றவற்றினால், இதனை திட்டமிட்டவர்கள் எதிர்பார்த்த விபரீதம் எதும் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டு விட்டது.
தங்களுடைய பொய்களூம் புரட்டுக்களையும் எமது மக்கள் புரிந்து விட்டமையினால், தங்களுடைய உழறல்களும் கோமாளித்தனங்களும் எமது மக்கள் எரிச்சலடைய தொடங்கி விட்டமையினால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லாது போய்விட்டது என்பதை புரிந்துகொண்டவர்கள் எமக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டு மூக்கு உடைபட்டுப் போய் இருக்கின்றனர்.
இந்த நிலையில் எமது மக்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்த மண் எங்களின் மண். இதனை நாமே ஆள வேண்டும் என்பதற்காக அளப்பரிய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன.
இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதலாவது பெண் போராளியான ஷோபா இன்றைய நாளிலேயே தன்னுடை உயிரரை தியாகம் செய்திருந்தார்.
எந்த அமைப்பின் ஊடாக அந்த தியாகங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவை மதிக்கப்பட வேண்டும். வீண் போகக்கூடாது என்பதை மனதில் வைத்து உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment