கொத்மலை விபத்துக்கான இழப்பீட்டை விடுவித்தது அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

கொத்மலை விபத்துக்கான இழப்பீட்டை விடுவித்தது அரசாங்கம்

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும்  நிதி சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டது.

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி,  சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதோடு அந்தப் பணம் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

விபத்தில் உயிரிழந்தவர்கள்  வாழ்ந்த  திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனாகொடுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனாதவில்லுவ, சிலாபம், புத்தள, தனமல்வில, வெல்லவாய மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment