கைது செய்வதை தடுத்து மஹிந்தானந்த முன்பிணை கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

கைது செய்வதை தடுத்து மஹிந்தானந்த முன்பிணை கோரிக்கை

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் சீன நிறுவனமொன்றிலிருந்து (Qingdao Seawin Biotech) இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற சேதன உர கப்பலுக்கு பணம் செலுத்திய வழக்கில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதற்கமைய, குறித்த கோரிக்கை தொடர்பான சமர்ப்பணங்களை மே மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணையொன்றை அனுப்புமாறு உத்தரவு விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற சீன தரமற்ற சேதனப் பசளை தொடர்பான நிதி மோசடி வழக்கில் ஊவா மாகாண பிரதம செயலாளரும், விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான மஹேஷ் லசந்த கம்மம்பில அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment