29,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் : அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, May 30, 2025

demo-image

29,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் : அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ENERGY-CRISIS-1-scaled-e1748598381543%20(Medium)
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தங்களிடம் ஆளனிப் பற்றாக்குறை மற்றும் வளப் பற்றாக்குறைகள் இருந்த போதிலும் சவால்களுக்கு முகங்கொடுத்து மின் தடைகளை சீர் செய்துவருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின் தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கை மின்சார சபை, மின் தடைகள் ஏதாவது ஏற்பட்டிருநு்தால் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத் தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின் தடைகளை வெகுவிரைவில் சீர்செய்யும் அதேவேளை, பொதுமக்கள் பொறுமைகாத்து தமக்கு ஆதரவு வழங்குமாறு மக்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *