ஓட்டமாவடி - தியாவட்டவானில் தீயில் கருகி சாம்பளாகிய மோட்டார் சைக்கிள்! - News View

About Us

About Us

Breaking

Friday, April 4, 2025

ஓட்டமாவடி - தியாவட்டவானில் தீயில் கருகி சாம்பளாகிய மோட்டார் சைக்கிள்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி - தியாவட்டவான் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (5) சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

மாத்தளை நோக்கி பயணிப்பதற்காக தியாவட்டவான் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் நிரப்பும் போதே மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியுள்ளது.

தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.

குறித்த சம்பவத்தில் பல்ஸர் ரக புத்தம்புதிய மோட்டார் சைக்கிள் முற்று முழுதாக தீயில் கருகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment