கட்சி அரசியலில் ஈடுபடுவது உலமா சபைக்கு பாதகமானது : வேட்பாளராக உள்ள மாவட்ட, பிரதேச கிளை உறுப்பினர்கள் பதவி விலக வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, April 17, 2025

கட்சி அரசியலில் ஈடுபடுவது உலமா சபைக்கு பாதகமானது : வேட்பாளராக உள்ள மாவட்ட, பிரதேச கிளை உறுப்பினர்கள் பதவி விலக வலியுறுத்து

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் மாவட்ட அல்­லது பிரதேசக் கிளை­களின் பத­வி­தாங்­கு­னர்கள் நேர­டி­யாக கட்சி அரசியலில் ஈடு­பட்டு வேட்­பா­ளர்­க­ளாக செயல்­ப­டு­கின்­றமை ஜம்இய்யாவின் இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்கும் அதன் கூட்டுப் பணி­க­ளுக்கும் பாத­க­மாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நிறை­வேற்றுக் குழுவின் அவ­சரக் கூட்டத்­தின்­போது கலந்­து­கொண்ட அனை­வ­ராலும் ஏக­ம­ன­தாக ஏற்றுக் ­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி தேர்­தலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமாவின் மாவட்ட அல்­லது பிர­தேசக் கிளை­களின் பத­வி­தாங்­கு­னர்கள் வேட்பாளர்­க­ளாகப் போட்­டி­யி­டு­கின்­றமை தொடர்பில் நாட்டின் பல பகு­தி­களில் இருந்தும் தொடர்ந்து தெளி­வுகள் கோரப்­பட்ட வண்ணமுள்­ளதால் அது பற்றி கலந்­தா­லோ­சனை செய்­வ­தற்­காக கடந்த வாரம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழுவின் அவ­சரக் கூட்டம் ஒன்று நடை­பெற்­றது.

இதன்போதே, மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது, இது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோர் இது தொடர்பான தீர்மானத்தை குறித்த அறிக்கையின் ஊடாக வெளியிட்டுள்ளர்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அதில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் மாவட்ட அல்­லது பிரதேசக் கிளை­களின் பத­வி­தாங்­கு­னர்கள் வேட்­பா­ளர்­க­ளாகக் களமி­றங்கி உள்­ளமை பற்றிப் பல்­வேறு கேள்­விகள் தலைமையகத்துக்கு தினமும் வந்து கொண்­டி­ருக்­கின்­றமை பற்றி ஆரா­யப்­பட்­டது.

அத்­துடன், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கடந்த 100 வரு­டங்­க­ளாக பக்­க­சார்போ அல்­லது கட்சி அர­சியல் சார்போ இன்றி இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மார்க்க ரீதி­யி­லான வழி­காட்­டல்­களைச் செய்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது என்ற அடிப்­ப­டையில், மாவட்ட அல்­லது பிர­தேசக் கிளை­களின் பத­வி­தாங்­கு­னர்கள் நேரடியாக கட்சி அர­சி­யலில் ஈடு­பட்டு வேட்­பா­ளர்­க­ளாக செயல்படுகின்­றமை ஜம்­இய்­யாவின் இலக்­கு­களை அடைந்து கொள்வ­தற்கும் அதன் கூட்டுப் பணி­க­ளுக்கும் பாத­க­மாக அமையும் என்று அக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட அனை­வ­ராலும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­ கொள்­ளப்­பட்­டது.

எனவே, மேற்­படி தேர்­தலில் வேட்­பா­ளர்­க­ளாக இருக்கும் பதவிதாங்குனர்கள் தாங்­க­ளா­கவே தமது பத­வியில் இருந்து விலகிக் கொள்ளல் வேண்டும் எனவும் அவ்­வாறு வில­கிக்­ கொள்­ளாத பட்சத்தில் யாப்பின்,

‘8 - 08 (இ) ஜம்­இய்­யாவின் நோக்­கங்­களை அடை­வ­தற்குத் தடையாகவிருத்தல்’ அல்­லது

‘9 - 25 (ஃ) பொது­வாக ஜம்­இய்­யாவின் குறிக்­கோள்­களை எய்­து­வ­தற்கு தேவை­யா­னதும் அல்­லது இடை­நேர்­வி­ளை­வா­ன­து­மான வேறு எல்லாச் செயல்­க­ளையும் கரு­மங்­க­ளையும் செய்தல்’

’10 - 04 (ஈ) தனது கட­மையைப் புரிய முடி­யாமை அல்­லது மத்­திய சபையின் கூட்டுப் பொறுப்மை மீறல்’ அல்­லது

’11 - 18 (ஈ) மாவட்டக் கிளையின் கூட்டுப் பொறுப்பை மீறல்’ அல்­லது

’11 - 33 (ஈ) தனது கட­மையைப் புரிய முடி­யாமை அல்­லது பிர­தேசக் கிளையின் காரியக் குழுவின் கூட்டுப் பொறுப்பை மீறல்’ அல்­லது

’11 - 37 (ஐ) காலத்­துக்குக் காலம் பிர­தேசக் கிளையின் காரியக் குழுவால் தீர்­மா­னிக்­கப்­படும் ஜம்­இய்­யாவின் குறிக்­கோள்­க­ளுக்கு மாறு­ப­டாத அனைத்துக் கட­மை­க­ளையும் அவர் செய்தல் வெண்டும்’ அல்­லது

’14 - ஜம்­இய்­யாவின் நோக்­கத்தை அடை­வ­தற்குத் தடை­யா­க­வி­ருத்தல்’ என்ற யாப்பு விதி­களின் அடிப்­ப­டை­யிலும்

2000ஆம் ஆண்டின் - 51ஆம் இலக்க சட்­டத்தின் பிர­காரம் இலங்கை சன­நா­யக சோச­லிஸக் குடி­ய­ரசின் பாரா­ளு­மன்­றத்­தினால் கூட்டிணைக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் எந்தப் பத­வி­தாங்­கு­னர்­களும் நேரடி அர­சி­யலில் இது கால வரையில் ஈடு­ப­ட­வில்லை என்­ப­துடன், இவ்­வாறு அர­சி­யலில் வேட்பாளர்­க­ளாக இருப்­பது ஜம்­இய்­யாவின் இலக்­கு­களை அடைந்துகொள்­வ­தற்கும் அதன் கூட்டுப் பணி­க­ளுக்கு பாத­க­மாக அமையும் என்­ப­தாலும் இவ்­வாறு அர­சி­யலில் ஈடு­படும் ஜம்இய்யாவின் மாவட்ட அல்­லது பிர­தேசக் கிளை­களின் பதவிதாங்கு­னர்கள் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது என்பதை இத்தால் உங்களுக்கு அன்புடன் அறியத் தருகின்றோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment