தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை...! - News View

About Us

Add+Banner

Thursday, April 3, 2025

demo-image

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை...!

SEUSL-01-1-1024x768
நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2025.04.03 ஆம் திகதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் முதலாவதாக பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி மூன்றாவதாக கலாநிதி யூ.எல். செயினுடீன் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது பதவிக்காலம் கடந்த 2024.08.09 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.


அதன் அடிப்படையில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இருந்து அப்போதைய பேரவை பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோரை ஜனாதிபதிக்கு சிபார்சு செய்திருந்ததது. இருந்தபோதும் அரசியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் நியமனங்கள் வழங்கப்படாது பதில் உபவேந்தராக கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டார்.

பின்னர் மீண்டும் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த பெப்ரவரி 06 ஆம் திகதி விடுத்திருந்தார். அதற்கமைய மார்ச் 06 ஆம் திகதி, 3.00 மணிவரை ஒன்பது பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன் அடிப்படையில், கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எம்.ஐ.எஸ். சபீனா, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், பேராசிரியர் ஏ.ஜௌபர் மற்றும் கலாநிதி யூ.எல். செயினுடீன் உள்ளிட்ட ஒன்பதுபேர் விண்ணப்பித்திருந்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறையும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை. இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *