வெலிகம ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தேகநபரை ரூ.10 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதி செய்ததாக தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாத்தறை நீதிமன்றம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்ய பிடியாணை பிறப்பித்ததோடு வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்தது.
அதன் பின்னர், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, தொடர்ச்சியாக இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் போகம்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையில் அவருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment