சர்ச்சைக்குரிய கற்பாறைத் தொகுதியை கைப்பற்றியது சீனா : நாட்டு கொடியையும் பறக்கவிட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 30, 2025

சர்ச்சைக்குரிய கற்பாறைத் தொகுதியை கைப்பற்றியது சீனா : நாட்டு கொடியையும் பறக்கவிட்டது

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள ஒரு மக்கள் வசிக்காத கற்பாறைத் தொகுதியின் மீது சீனா “கடல்சார் நிர்வாகத்தை அமுல்படுத்தும் வகையில் பிலிப்பைன்ஸ் இராணுவ பாதுகாப்புத் தளத்திற்கு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறிய கற்பாறைத் தொகுயில் நாட்டின் கொடியை நட்டுள்ளது.

சீனா அரசுடன் தொடர்புள்ள ஊடகங்கள் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டதோடு, இந்த மாத தொடக்கத்தில் பீஜிங் டைக்ஸியன் ஜியாவோ என்று அழைக்கும் சாண்டி கே கற்பாறைத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சீன கடலோர காவல்படை அதிகாரிகள் சீனக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர் .

ஸ்ப்ராட்லி தீவுத் தொகுதியில் அமைந்துள்ள கற்பாறைத் தொகுதியை தாய்வான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளினாலும் உரிமை கோரப்படுகிறது.

அண்மையில் “சட்டவிரோத தரையிறக்கம் மற்றும் மணல் மாதிரி சேகரிப்பை” முயற்சிப்பதாகக் கூறி, இந்த மணல் திட்டுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் “ஊடுருவிய” பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்களை சீனத் தரப்பு தடுத்து நிறுத்தியுள்ளதாக அறியவருகிறது.
சீனா இந்தப் பகுதியில் சிறிய அளவிலான தீவுகளைக் கைப்பற்ற மேற்கொள்ள முயற்சிக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் கடலோர காவல்படை கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. சுமார் 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சாண்டி கே ஒரு இயற்கை அம்சம் என்றும், அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றும் சீனா கூறுகிறது.

2013 மற்றும் 2016 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தென் சீனக் கடலில் ஒரு பெரிய அளவிலான நிலக் கைப்பற்றல் திட்டத்தை சீனா மேற்கொண்டது. வளங்கள் நிறைந்த நீர்வழிப்பாதையில் சுமார் 90% மீதான தனது உரிமையை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சியில் பல இராணுவ காவல் நிலையங்களை சீனா உருவாக்கிவருகிறது.

கடந்த ஜூன் மாதம், புதுப்பிக்கப்பட்ட சீன கடலோர பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.அந்த விதிமுறைகள் வெளிநாட்டு கப்பல்களில் ஏறவும், கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினரை 60 நாட்கள் வரை தடுத்து வைக்கவும் அனுமதிக்கின்றன. 

சீனாவால் உரிமை கோரப்படும் நீர்நிலைகளில் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கருதப்படும் வெளிநாட்டு கப்பல்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தவும் இந்த விதிமுறைகள் அனுமதிக்கிறது.

No comments:

Post a Comment