பிரிட்டனில் 4 இலங்கையர்கள் தொடர்பில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 3 பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடைகள் தொடர்பில் விடயங்களை ஆராய்ந்து அதற்காக மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவைக்கு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக மேற்படி அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரை உள்ளடக்கியதாக மேற்படி அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment