அமைச்சர்கள், எம்.பிக்களின் 22 கோப்புகள் அதிகாரிகளிடம் : CID விசாரணை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 2, 2025

அமைச்சர்கள், எம்.பிக்களின் 22 கோப்புகள் அதிகாரிகளிடம் : CID விசாரணை ஆரம்பம்

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணை பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கோப்புகள் தொடர்பாக 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தொகைகளில் ரூ. 100 மில்லியனுக்கும் மேல் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளும்போது ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதி நிதிய கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விபரங்களைப் பெறுவதற்கான உத்தரவை நேற்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து பெற விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment