காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிரதேச கடற்கரை பகுதியில் கரையொதுங்கியிருந்த மர்மப் பொருள் ஒன்றை கண்டெடுத்த நிலையில் அது வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (03) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வரதராஜன் கவிந்துஜன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
திருநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சம்பவதினமான நேற்று மாலையில் குறித்த கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு கரையொதுங்கியிருந்த மர்ம பொருள் ஒன்றை கண்டெடுத்து அதன் பகுதியில் இருந்த நூலை இழுத்த நிலையில் அது வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்ததையடுத்து அவர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த குண்டை குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பரிசோதித்ததில் அது வெளிச்ச குண்டு என கண்டுபிடித்ததுடன் வெடித்து திதறிய அதன் பாகங்களை மீட்டனர். இந்த குண்டு வெடிப்பையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
No comments:
Post a Comment