தேங்காய் பறிக்க முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

தேங்காய் பறிக்க முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தோரப்பிட்டிய தோட்டத்தில் அனுமதியின்றி தேங்காய் பறிக்க தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக குறித்த நபரை காவலாளி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட போர 12 ரக துப்பாக்கியுடன் குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிக்காக 2025 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment