சிறைகளில் வாடும் ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள் - ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

சிறைகளில் வாடும் ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள் - ரவிகரன் எம்.பி

நீண்ட காலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 01.03.2025 (இன்று) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி, மருத நகரைச் சேர்ந்த ஆனந்த சுதாகர் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சுதாகர் ஆயுள் தண்டனை கைதியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி கடந்த 2018 இல் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிக்கிரியைக்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.

இறுதிக்கிரியையினை முடித்துக்கொண்டு சிறைச்சாலை பேருந்தில் ஆனந்த சுதாகர் ஏறச் சென்றவேளை அவரது பிள்ளை தந்தையின் கையைப் பிடித்து தானும் சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் கலங்க வைத்தது.

நீதி அமைச்சரே, நீதியைத் தாருங்கள். அவரோடு சேர்ந்து சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளவர்களுக்கும் விடுதலை தாருங்கள் என்றார்.

No comments:

Post a Comment