முதலாம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 29, 2025

முதலாம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

நோன்புப் பெருநாளுக்காக எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான பதில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment