துப்பாக்கிச் சூடுகளின் இடைத் தொடர்புகள் ஆராயப்படுகிறது, வெகுவிரைவில் உண்மை வெளிவரும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

துப்பாக்கிச் சூடுகளின் இடைத் தொடர்புகள் ஆராயப்படுகிறது, வெகுவிரைவில் உண்மை வெளிவரும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இடம்பெறும் படுகொலைகள் மற்றும் அதனுடனான இடைத்தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மித்தெனிய துப்பாக்கிச் சூடு, புதுக்கடை நீதிமன்றம் துப்பாக்கிச் சூடு மற்றும் கொட்டாஞ்சேனை பகுதி துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைத் தொடர்புகள் ஆராயப்படுகின்றன. வெகுவிரைவில் உண்மை வெளிவருமென ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ராஜபக்ஷக்களின் குடும்ப உறுப்பினர்களில் இருந்து மிகுதியாகியுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் பற்றி பேசுகிறார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சில சம்பவத்துக்கும், குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கும் இடையில் இடைத்தொடர்புகள் காணப்படுகின்றன.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இடம்பெறும் படுகொலைகள் மற்றும் அதனுடனான இடைத் தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மித்தெனிய துப்பாக்கிச்சூடு, புதுக்கடை நீதிமன்றம் துப்பாக்கிச்சூடு மற்றும் கொட்டாஞ்சேனை பகுதி துப்பாக்கிச்சூடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைத்தொடர்புகள் ஆராயப்படுகின்றன.

பாதாளக்குழு உறுப்பினர் ஜூலம்பிடி அமரவுடன் தொடர்பில் இருந்தவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சிறையில் இருந்து வெளியில் எடுக்கிறோம் என்று தங்காலையில் இருந்து குறிப்பிட்டவர்கள் இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். ஆகவே இடைத் தொடர்புகள் ஆராயப்படுகிறது. வெகுவிரைவில் உண்மை வெளிவரும் என்றார்.

No comments:

Post a Comment