ரூபா 1.2 பில்லியன் பெறுமதியான சட்டவிரோத சிகரெட் தொகை அழிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

ரூபா 1.2 பில்லியன் பெறுமதியான சட்டவிரோத சிகரெட் தொகை அழிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்க இலங்கை சுங்கம் இன்று (04) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரி செலுத்தாமல் சம்பந்தப்பட்ட சிகரெட் தொகுதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும், ரூ. 1.2 பில்லியன் ரூபா பெறுமதியானது எனவும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், இலங்கை புகையிலை நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சட்டவிரோத சிகரெட் அழிப்பு முற்றத்தில் அழிக்கப்பட்டது.

மேலும், 2024, 2022 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதி, சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment