இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதிக்கு தடை எதுவுமில்லை : சபையில் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதிக்கு தடை எதுவுமில்லை : சபையில் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பாதுகாப்பு அமைச்சினால் அங்கிகரிக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய இஸ்லாமிய மத நூல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு எந்த தடை உத்தரவும் விதிக்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு கருதி, ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அனைத்து மத புத்தங்களும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைக்கு மாத்திரம் உட்படுத்தப்படுகிறது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 2021ஆம் ஆண்டு மே மாதம் பாதுகாப்பு அமைச்சின் அப்பாேதைய செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய இஸ்லாமிய மத நூல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு எந்த தடை உத்தரவும் விதிக்கப்படவில்லை.

என்றாலும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்ரைக்கமைய அனைத்து மத புத்தகங்களும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை மாத்திரம் இடம்பெறுகிறது. குறித்த ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை காரணமாக புத்தகம் இறக்குமதியாளர்களுக்கு எந்த சிரமங்களும் ஏற்படுவதில்லை.

அத்துடன் இந்த நடவடி்கையை மேற்கொள்ளும்போது பாதுகாப்பு அமைச்சினால் எந்த தாமதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஒங்குபடுத்தலின் கீழ் இருக்கும் மீளாய்வு குழுவின் அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு, 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்கப்படும்.

இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக அடிப்படைவாத புத்தகங்கள் இந்த நாட்டுக்குள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதுடன் காலத்துக்கு ஏற்ற தரவுகள் மீளாய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை அனைத்து மத புத்தகங்களுக்கும் இடம்பெறுகிறது என்றார்.

No comments:

Post a Comment