இவ்வாண்டு உலகில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடிய இடமாக சிகிரியா விளங்குகின்றது.
Booking.com என்ற இணையத்தளத்தில் 360 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கருத்துக்களின்படி மிகவும் கவரக்கூடிய இடமாக சிகிரியா இடம்பிடித்துள்ளது.
தரமான விருந்தோம்பல் மற்றும் சேவை கட்டமைப்புடன் சாகசங்களை விரும்பும் பயணிகள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக சிகிரியாவை ஒன்லைன் பயண நிறுவனம் (OTA) பெயரிட்டுள்ளது.
கிராமம் முதல் குன்று வரை அமைதி மற்றும் சாகசங்களின் முடியாத கலவையை வழங்குகிறது என்று Booking.com தனது குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த மையப்புள்ளியில் அமைந்துள்ள சிகிரியா மலைக்குன்று யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழ்ந்த காசியப்பன் என்ற மன்னனால், இம்மலைக்குன்று வடிவமைக்கப்பட்டு ஆட்சி செலுத்தப்பட்டு வந்த இடமாகும்.
இதன் வடிவமைப்பானது தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது சிங்கம் ஒன்று படுத்திருப்பது போல காட்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனை 'சிங்க குகை' என்றும் அழைக்கும் வழக்கம் மக்களிடையே காணப்படுகின்றது.
“பண்டைய இலங்கையின் புத்திசாலித்தனமாக கலைப்படைப்பு” என Booking.com வர்ணித்துள்ளமை சிகிரியாவை காண பயணிகளை உற்சாகக்கப்படுத்துகிறது.
பத்திக துணிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட அம்சங்களையும் சிறப்பித்து குறிப்பிட்டள்ளது.
அத்துடன், யானைகளின் நடமாட்டத்தை காண மின்னேரியா தேசிய பூங்கா ஜீப் சபாரியை ஒன்லைன் பயண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment