(இராஜதுரை ஹஷான்)
உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளின் செயற்பாடுகள் என்னவென்பது தொடர்பில் தெளிவற்றத்தன்மை காணப்படுகிறது. நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தேர்தல்கள் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியலமைப்பின் பிரகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். தேர்தலை நடத்தும் திகதி அனைவருக்கும் சாதகமான வகையில் அமையும்.
உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் என்ன, தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் வகிபாகம் என்பது தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்களை பொறுத்த வரையில் அதிகார ரீதியிலான சிக்கல்நிலை காணப்படுகிறது. ஆகவே எதிர்வரும் காலப்பகுதிகளில் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தேர்தல்கள் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
தேர்தல் முறைமை மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதற்கமைவாக அரசியல் தரப்பினர்கள் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.
No comments:
Post a Comment