உலக அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் ஆகியோருக்கு இடையிலான சந்திபப்பொன்று இன்று (11) இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் சுகாதாரம், துறைமுகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முன்னாள் பிரித்தானிய பிரதமரிடம் தெரிவித்ததுடன், அதற்காக முதலீட்டாளர்களை ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
அத்தோடு, பிரித்தானியாவின் நிபுணத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவதற்கு இலங்கைக்கு காணப்படும் இயலுமையையும் டோனி பிளேயார் சுட்டிக்காட்டினார்.
காலநிலை இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல், நல்லாட்சி, விவசாயம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் மற்றும் பயிற்சிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய டோனி பிளேயார், இலங்கையின் தற்போதைய ஆட்சிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment