ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு சவூதி அரேபியா விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 11, 2025

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு சவூதி அரேபியா விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹாஜிகளின் பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில்இந்நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு நாட்டுக்கும் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு ஆண்டுதோறும் ஹஜ் பயணத்திற்கான அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் மக்காவில் ஹஜ் பயணத்திற்கு வரும் ஹாஜிகளின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, 2025ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது, யாத்ரீகர்களுடன் குழந்தைகள் செல்ல அனுமதி இல்லை என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போது இதுவரை ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment