அரசியலமைப்பு விடயத்தையும், பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வு விடயத்தினை சமநேரத்தில் முன்னெடுப்பதற்கான இயலுமை தற்போதைய அரசாங்கத்திடத்தில் காணப்படவில்லை என்று தேசிய சமதானப்பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
அரசாங்கம் அரசியலமைப்பு விடயங்களை விடவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே முன்னுரிமை அளித்து கரிசனைகளை கொண்டுள்ளதென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த கருத்து தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்பேதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் அரசியலமைப்பு விடயத்தினை பொருளாதார விடயங்களை கையாண்டதன் பின்னர் கையாள்வதற்கு முனைகின்றது என்று கருதுகின்றேன்.
எனினும் அரசியலமைப்பு சம்பந்தமான விடயம் முக்கியமானது, வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும்.
ஆகவே பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கம் சமகாலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி அவற்றை வினைத்திறனாக செயற்படுத்துவதன் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும்.
No comments:
Post a Comment