இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இலச்சினையை சட்டவிரோதமாக உபயோகித்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள மோசடிகள் தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
மத்திய வங்கியில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து மக்களை ஏமாற்றி போலி தொழில் வாய்ப்பு விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் வேறு இணையதளங்களில் வெளியிட்டு இந்த மோசடி இடம் பெற்றுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அது தொடர்பில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் அறிவித்துள்ள மத்திய வங்கி இவ்வாறு சமூக வலைதளங்கள் மூலம் தொழில் வாய்ப்புகள் தொடர்பான எத்தகைய விளம்பரங்களையும் மத்திய வங்கி வெளியிடாது என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் மக்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மத்திய வங்கியின் இணையதளத்தில் ‘வேலை வாய்ப்பு’ என்ற பகுதியின் கீழ் மற்றும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக ஊடகத்தின் ஊடாக மட்டுமே அதனை வெளியிடும் என்றும் அந்த வங்கி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment