மின் வெட்டு இடம்பெறாது - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 11, 2025

மின் வெட்டு இடம்பெறாது

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பகுதி நேர மின் வெட்டு நாளை (12) இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும், களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமை பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை மின்சார விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

மின் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்றும் (10), இன்றும் (11) நாடு முழுவதும் மின் வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 ½ மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் எனவும் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment