ரணில், சஜித் இருவரும் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது - வெலிபன தம்மாராம தேரர் - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

ரணில், சஜித் இருவரும் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது - வெலிபன தம்மாராம தேரர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரணில், சஜித் இரண்டு பேரும் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது. இல்லாவிட்டால் மக்கள் அவர்களின் புதைகுழிக்கும் சாபமிடும் நிலை ஏற்படும். அதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களை பார்க்காமல் மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலிபன தம்மாராம தேரர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டியதன் தேவைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை கீழ் மட்டத்தில் இடம்பெற்று வருகிறது. என்றாலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருக்க முடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரண்டு தலைவர்களும் விரைவாக ஒரு மேசைக்கு வந்து கலந்துரையாட வேண்டும்.

தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. இல்லாவிட்டால் அவர்கள் மரணித்தால் அவர்களின் புதைகுழிக்கும் மக்கள் சாபமிடும் நிலை ஏற்படும்.

ரணில் விக்ரமசிங்க இந்த நாடு, சர்வதேசம் ஏற்றுக்கொண்ட தலைவர். அவரின் ஆலோசனை இந்த நாட்டுக்கு தேவை. அதேபோன்று சஜித் பிரேமதாச இந்த நாட்டு மக்களின் மனதை வெற்றி கொண்ட தலைவர். அவரின் தேவைப்பாடு நாட்டுக்கு இருக்கிறது. இவர்கள் இருவரின் இணக்கப்பாடு மூலம் நாட்டின் அபிவிருத்தி, வெற்றியை மக்களால் அடைந்துகொள்ள முடியும்.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கு இரண்டு தரப்பில் உள்ளவர்களுக்கும் சிறு சிறு சிக்கல்கள் இருக்கலாம். அதனை விரைவில் அவிழ்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அவிழ்த்து விடுவார்கள்.

இவர்கள் இரண்டு பேரும் ஒரு கட்சியில் இருந்த தலைவரும் உப தலைவருமாகும். அதனால் அதிகாரங்கள் வரப்பிரசாதங்களை பார்க்காமல் ஒரு அடி பின்னுக்கு சென்று அர்ப்பணிக்க வேண்டும். மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு, தேசம் ஆதரவாளர்களை பாதுகாக்கும் நோக்கமாக இருக்க வேண்டும்.

மேலும், 76 வருட சாபத்தை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேல் போடமுடியாது. இந்த சாபத்துக்கு தோல் கொடுத்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்துகொண்டு 39 அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள். இன்று இவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்கள் கைசேதப்படுகின்றனர். 76 வருட சாபத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணியே காரணமாகும் என்றார்.

No comments:

Post a Comment