சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளமை குறித்து அரசாங்கம் ஆராயும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த விவகாரத்தை மூடிமறைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை. குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இல்லை.
இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து இந்த நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவோம். மக்கள் வழங்கிய ஆணையை அவமதிக்கமாட்டோம்.
சில யதார்த்தபூர்வமான நெருக்கடிகள் காரணமாகவே சில விசாரணைகள் தாமதமாகின்றன. அரசாங்கத்தின் தலையீடுகளால் தாமதமாகவில்லை.
No comments:
Post a Comment