மட்டக்களப்பு - கொழும்பு ரயிலில் மோதி உயிரிழந்த 6 காட்டு யானைகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

மட்டக்களப்பு - கொழும்பு ரயிலில் மோதி உயிரிழந்த 6 காட்டு யானைகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் மோதுண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (20) இடம்பெற்றுள்ளது.

கல்லோயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மேற்படி அனர்த்தத்தில் 6 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்லோயா ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று திகாலை 3.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி விபத்து காரணமாக அந்த பிரதேசத்தில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாகவும், நிலைமை விரைவில் சீர் செய்யப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment