2022 மே மாத போராட்டக் காலத்தில் சொத்துக்கள் சேதமடைந்ததாக தெரிவித்து 43 அரசியல்வாதிகள் ரூ. 1.22 பில்லியனுக்கும் அதிகமான நிதியை அரசாங்கத்திடமிருந்து நட்டஈடாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த 43 அரசியல்வாதிகளும் அரசாங்கத்திடமிருந்து அந்த நட்டஈட்டை பெற்றுக் கொண்ட விதம் தொடர்பிலும் அமைச்சர் சபையில் தெளிவுபடுத்தினார்.
பாதிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் அதிக நிதியை மதிப்பீடு செய்யுமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவர்கள் மேற்படி நட்டஈட்டை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
.
பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற புலமைச் சொத்து தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைக்க எதிர்க்கட்சிக்கு எந்த விதத்திலும் வாய்ப்பு ஏற்படாது என தெரிவித்த அவர், அதனை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எமது நாட்டின் பொருட்களை முழு உலகத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதும் கடந்த அரசாங்கங்கள் அதனை மேற்கொள்ளவில்லை என்றும், அந்த வகையில் தேயிலை, மிளகு, கறுவா போன்ற ஏற்றுமதி பொருட்கள் இலங்கையின் இலச்சினையுடன் உலகிற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு இருந்ததாகவும் எனினும் அவர்கள் அதனை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசியல் அதிகாரத்தை பாவித்து மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்களை நாம் ஏற்கனவே வெளியிட்டோம். எதிர்காலத்திலும் அதை நாம் வெளியிடுவோம். ஏனெனில், அவர்கள் தமது பெயருக்கு அதனை பெற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் யார் என்பதை நாம் வெளிப்படுத்துவோம்.
அனர்த்தங்களின்போது சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கு முழுமையான நட்டஈடாக ரூ. 25 இலட்சத்தையே நட்ட ஈடாக வழங்க முடியும். அந்தத் தொகையும் சிலவேளைகளில் கிடைப்பதில்லை. எனினும் அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு அதிகளவு நிதியை நட்ட ஈடாக பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. அந்த வகையில்;
கபில நுவான் அதுகோரல ரூ. 504,000
விமலவீர திசாநாயக்க ரூ. 550,000
கீதா குமாரசிங்க ரூ. 972,000
திஸ்ஸகுட்டியாராச்சி ரூ. 1,143,000
குணபால ரத்னசேகர ரூ. 1,412,780
பிரேமநாத் சி. தொலவத்த ரூ. 2,300,000
ஜயரத்ன பிரியங்கரட்ன ரூ. 2,348,000
சம்பத் அதுக்கோரல ரூ. 2,540,610
ஜயந்த கெட்டகொட ரூ. 2,814,800
விமல் வீரவன்ச ரூ. 2,954,000
பேராசிரியர் சன்ன ஜயசுமன ரூ. 3,334,000
அகில எல்லாவல ரூ. 3,554,250
சமல் ராஜபக்ஷ ரூ. 6,539,374
சந்திம வீரக்கொடி ரூ. 6,948,800
அசோக பிரியந்த ரூ. 7,295,000
சமன்பிரிய ஹேரத் ரூ. 105.2 இலட்சம்
ஜனக பண்டார தென்னகோன் ரூ. 105.5 இலட்சம்
ரோஹித அபேகுணவர்தன ரூ. 116.4 லட்சம்
சீதா அரம்பேபொல ரூ. 137.8 இலட்சம்
சஹான் பிரதீப் ரூ. 171.3 இலட்சம்
ஷெஹான் சேமசிங்க ரூ. 185.1 இலட்சம்
இந்திக அனுருத்த ரூ. 195.5 இலட்சம்
மிலன் ஜயதிலகே ரூ. 223 இலட்சம்
ரமேஷ் பத்திரணா ரூ. 281 இலட்சம்
துமிந்த திசாநாயக்க ரூ. 288 இலட்சம்
கனக ஹேரத் ரூ. 292 இலட்சம்
டிபி ஹெரத் ரூ. 321 இலட்சம்
பிரசன்ன ரணவீர ரூ. 327 இலட்சம்
டபிள்யூ. டி. வீரசிங்க ரூ. 372 இலட்சம்
சாந்த பண்டாரா ரூ. 391 இலட்சம்
எஸ்.எம். சந்திரசேன ரூ. 438 இலட்சம்
சனத் நிஷாந்த ரூ. 427 இலட்சம்
சிறிபால கம்லத் ரூ. 509 இலட்சம்
அருந்திக பெர்னாண்டோ ரூ. 552 இலட்சம்
சுமித் உடுகும்புர ரூ. 559 இலட்சம்
பிரசன்ன ரணதுங்க ரூ. 561 இலட்சம்
கோகிலா குணவர்தன ரூ. 587 இலட்சம்
மொஹான் டி சில்வா ரூ. 601 இலட்சம்
நிமல் லான்சா ரூ. 692 இலட்சம்
அலி சப்ரி ரஹீம் ரூ. 709 இலட்சம்
காமினி லொகுகே ரூ. 749 இலட்சம்
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ரூ. 934 இலட்சம்
கெஹெலிய ரம்புக்வெல்ல ரூ. 959 இலட்சம் என நிதியை பெற்றுள்ளனர்.
இவர்கள் 43 பேர் மாத்திரம் ரூ. 1.22 பில்லியன் பெற்றுள்ளனர். இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளனர். அதனை நாம் மேற்கொள்வோம்.
எதிர்க்கட்சியில் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் இவ்வாறானவர்களே. எதிர்க்கட்சி மூலம் எத்தகைய இடறல்கள் வந்தாலும் இந்த அரசியல் கலாசாரத்தை நாம் கண்டிப்பாக மாற்றுவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment