மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) உரையாற்றுகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தந்தை, மகள் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகளும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் இன்று (21) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment