ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பல பொருட்கள் : ஆரம்பமாகிறது CID விசாரணைகள் - News View

About Us

About Us

Breaking

Friday, January 10, 2025

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பல பொருட்கள் : ஆரம்பமாகிறது CID விசாரணைகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து அண்மையில் காணாமல்போன சில பொருட்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும், இந்தப் பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல்போன பொருட்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான பட்டியலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக்க, இந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment