மட்டக்களப்பில் இயற்கையான சரணாலயத்தில் சஞ்சரித்துள்ள வெளிநாட்டு பறவைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

மட்டக்களப்பில் இயற்கையான சரணாலயத்தில் சஞ்சரித்துள்ள வெளிநாட்டு பறவைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ள ஏத்தாலைக் குளம் கிராமத்தில் இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தில் வருடந்தோறும் பறந்து வந்து சஞ்சரித்து தமது வாழ்வியலை நடாத்தும் வெளிநாட்டு பறவைகளை காண முடிகிறது.

இப்பறவைகள் வருடத்தில் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இங்கு வருகை தந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து தமது குஞ்சுகள் வளர்ந்ததும் மீண்டும் மார்ச் மாத நடுப் பகுதியில் தமது சொந்த நாடுகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பறவைகளைக் காண்பதற்கு பல பாகங்களிலும் இருந்து உல்லாச பயணிகள் வருகை தருவதை அவதானிக்க முடிகின்றது

ஆரையம்பதி நிருபர்

No comments:

Post a Comment