கைதான உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, January 10, 2025

கைதான உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு, ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜதந்திரியான உதயங்க வீரதுங்க, இன்றையதினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் தாக்கப்பட்ட தலபத்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

நுகேகொடை, தலபத்பிட்டிய, கனத்த வீதியில் வசிக்கும் உதயங்க வீரதுங்கவிற்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினை தொடர்பில் அவர்களுக்கிடையில் நேற்று (09) ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உதயங்க வீரதுங்க குறித்த நபரின் முகத்தில் பிளாஸ்டிக் குழாயால் தாக்கியதால், மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment