தனியார் மற்றும் அரச சார்பு துறை ஊழியர்களின் சேவைகளை துரிதமாக்க வட்சப்அப் இலக்கம் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2025

தனியார் மற்றும் அரச சார்பு துறை ஊழியர்களின் சேவைகளை துரிதமாக்க வட்சப்அப் இலக்கம் அறிமுகம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

தனியார் மற்றும் அரச சார்பு துறையின் ஊழியர்களின் சேவைகளை மிகவும் விரைவாக மேற்கொள்ளவதற்காக தொழில் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்திடம் நிவாரணம் மற்றும் தலையீடு கோரி பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் மகஜர்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக 070 7227877 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில் திணைக்களத்தின் பிரதான நோக்கம் தொழில் அமைதியை பேணிச்செல்வது மற்றும் அதனை மேலும் பலப்படுத்துவதாகும். அத்துடன் இந்த நாட்டின் தனியார் மற்றும் அரச சார்பு துறை ஊழியர்களின் சேவை பிரச்சினைகளுக்கு விரைவாக நிவாரணம் பெற்றுக் கொடுப்பதாகும்.

அதன் பிரகாரம் பாெதுமக்களின் காலம் மற்றும் செலவை கட்டுப்படுத்தல் மற்றும் விரைவாக பதில் அளிப்பதை மேன்படுத்துவதற்கும் அதிகாரிகளின் கால நேரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளும் வசதிக்காகவும் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment