வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த விவகாரம் : ஐசீசீபிஆர் சட்டத்தின் கீழ் விரிவான விசாரணை நடத்த உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2025

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த விவகாரம் : ஐசீசீபிஆர் சட்டத்தின் கீழ் விரிவான விசாரணை நடத்த உத்தரவு

வக்பு நியாய சபையின் (Wakfs Tribunal) விசா­ர­ணை­களை ஒலிப்­ப­திவு செய்து வட்ஸ்­அப்பில் அனுப்­பி­யமை தொடர்பில் ஐசீ­சீபிஆர் சட்டத்தின் கீழ் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு மாளி­கா­கந்த நீதவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கல்­ஹின்ன பள்­ளி­வாசல் தொடர்­பாக கடந்த டிசம்பர் 21ஆம் திகதி வக்பு நியாய சபையில் இடம்­பெற்ற விசா­ர­ணை­களை ஒலிப்­ப­திவு செய்து வட்ஸ்­அப்பில் அனுப்­பினார் என்ற குற்­ற­சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்­யப்­பட்டு கடந்த டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்­கப்­பட்டார்.

இதற்கு முன்­னரும் இரு தட­வைகள் இது போன்று வக்பு நியாய சபையில் இடம்­பெற்ற கல்­கின்ன பள்­ளி­வா­சலின் விசா­ர­ணை­களை ஒலிப்­ப­திவு செய்து வட்ஸ்­அப்பில் அனுப்­பி­ய­தாக பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் குறித்த சந்­தே­க­நபர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பான விசா­ர­ணைகள் மீண்டும் கடந்த 30ஆம் திகதி மாளிகா­கந்த நீதவான் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது குறித்த சந்­தே­க­நபர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டார்.

அதே­வேளை, வக்பு நியாய சபையின் விசா­ர­ணை­களை ஒலிப்­ப­திவு செய்து வட்ஸ்­அப்பில் அனுப்­பி­யமை தொடர்பில் ஐசீ­சீபிஆர் சட்டத்தின் கீழ் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு மரு­தானை பொலி­ஸா­ருக்கு மாளிகாகந்த நீதவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கல்­கின்ன பள்­ளி­வாசல் தொடர்­பாக வக்பு நியாய சபையில் மனுத் தாக்கல் செய்­துள்ள நுஸ்கி நஸீர் சார்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ர­னவும் சட்­டத்­த­ரணி கயால் தீக்­ச­னவும் இந்த வழக்கு விசா­ர­ணையின் போது மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். 

இந்த வழக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும் பெப்­ர­வரி 6ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

மாவட்ட நீதி­மன்­றத்தின் அதி­கா­ரங்­களை கொண்­டுள்ள வக்பு நியாய சபையில் கல்ஹின்ன பள்­ளி­வாசல் தொடர்­பாக ஐந்து பேரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முதலாவது பிரதிவாதியாக பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment