நண்பனுக்கு போதைப் பொருள் வழங்கிய இளைஞனுக்கு ஆயுள் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Friday, January 10, 2025

நண்பனுக்கு போதைப் பொருள் வழங்கிய இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் 25 கிராமுக்கும் அதிகளவான ஹெராயின் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக 26 வயது இளைஞருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (10) வழங்கினார்.

தேவராஜா லோரன்ஸ் என்ற 26 வயது திருமணமாகாத இளைஞருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள ஒரு நண்பருக்கு உணவு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் 25.09 கிராம் ஹெராயினை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்றபோது, ​​சந்தேகநபர், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடர்ந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment