முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 71 ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான இவர், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பின்னாளில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எம்.பியாக தெரிவான அவர், மலைநாட்டு புதிய நகரங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சராக பணியாற்றியுள்ள அவர், 2018 நடுப்பகுதியில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment