பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரமற்ற பென்சில்கள் ! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 28, 2025

பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரமற்ற பென்சில்கள் ! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பென்சில்களில், குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சாதாரணமாகவே பென்சில்களை மெல்லும் குழந்தைகள் இதனால், நீண்டகால நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் மருத்துவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள், சந்தையில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.

குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பென்சில்கள் வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தைகள் அவற்றை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

பென்சிலால் எழுதும் போதும் பென்சிலை கூர்மையாக்கும் போதும் சிறார்கள் தங்களை அறியாமலேயே பென்சிலை வாயில் வைத்து மென்று சாப்பிடுகின்றனர்.

குறிப்பாக பென்சில்கள் கவர்ச்சிகரமானதாக காணப்பட வேண்டுமென்பதால் அவற்றிற்கு அதிகளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக், காட்மியம் போன்ற கன உலோகங்கள் பூசப்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்த வகையில் குழந்தைகள் பென்சில்களை மெல்லும்போது அவர்களின் உடலில் இந்த இரசாயனங்களின் தாக்கங்கள் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பென்சில்கள் மற்றும் வர்ணப் பென்சில்கள் உற்பத்திக்கு ஒரு சர்வதேச தர நிர்ணயம் காணப்படுவதுடன் EN71-3 தரநிலைக்கு சான்றுப்படுத்தப்பட்ட பென்சில்கள் 19 வகையான கன உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.இது உடலுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன.

எனினும், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பல பென்சில்கள் இந்த சர்வதேச தரத்திற்கு உட்படாதவை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை புதிய பாடசாலை தவணைக்கான புத்தகப் பட்டியல்களைத் தயாரிக்கும் போது தரமான பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுவர்களின் பாவனைக்கு பொருத்தமற்ற பென்சில்கள் சந்தையில் காணப்படுவதாகவும் இவ்வாறான பென்சில்களை பயன்படுத்துவது பிள்ளைகளின் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் இலங்கை அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தரமற்ற பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களை பாவிப்பதன் மூலம் பிள்ளைகளின் சுகாதாரத்துக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படுவதுடன் கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுவது தொடர்பில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பென்சில் தயாரிக்கப் பயன்படும் காபன் பொருள் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும். பென்சில்களின் நுனிகள் அடிக்கடி உடைந்து, சரியாக எழுதாத நிலையில் இது குழந்தைகளின் கற்றலையும் பாதிக்கிறது.

இந்த நாட்களில் புத்தகப் பட்டியல் தயாரிக்கும் ஆசிரியர்கள் இவ் விடயம் குறித்து பெற்றோர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தரமான பாடசாலை உபகரணங்களை தமது பிள்ளைகளுக்கு வழங்குவதில் பெற்றோர்கள் விசேட கவனம் வெலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment