ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம் : AI பயன்படுத்தவும் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Friday, January 17, 2025

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம் : AI பயன்படுத்தவும் ஆலோசனை

3600 மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக ‘மெட்டா’ இயங்குகிறது. 

பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது நிர்வகித்து வருகிறது. 

உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தில் 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 

நிறுவனத்தை சீரமைக்கும் வகையில் 5 சதவீதம் அதாவது 3,600 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது.

அடுத்த மாதம் 10ஆம் திகதிக்குள் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு (தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சீ.என்.என்

No comments:

Post a Comment