5 கோடி ரூபா வேலைத்திட்டங்களில் மோசடி : கேள்வியெழுப்பிய அஷ்ரப் தாஹிர் எம்பி - News View

About Us

About Us

Breaking

Friday, January 17, 2025

5 கோடி ரூபா வேலைத்திட்டங்களில் மோசடி : கேள்வியெழுப்பிய அஷ்ரப் தாஹிர் எம்பி

நூருல் ஹுதா உமர்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16) பிரதேச செயலாளர் பி.ரி.எம் இர்பான் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது.

இதன்போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிரினால் அட்டாளைச்சேனை பிரதேச வீதிகள், வடிகான்கள் அபிவிருத்திகள் சம்பந்தமான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒலுவில் - 01, அல்- ஹிரா நகர், ஆலிம் நகர் போன்ற பிரதேசங்களின் 16 கிரவல் வீதி அபிவிருத்திகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இது தொடர்பான தகவல்களையும் விளக்கங்களையும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா விடம் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மேற்படி வீதி அபிவிருத்திகள் தொடர்பான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் எதுவித அனுமதிகளும் பெறப்படவில்லை என தெரிய வந்ததுடன் கிரவல் வீதிகளுக்கு மேலால் மீண்டும் கிரவல்களை போட்டு மக்கள் வரிப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கண்டித்துப் பேசினார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment