அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ள 3000 இலங்கையர்கள் ! - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ள 3000 இலங்கையர்கள் !

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவிற்காக காத்திருக்கும் இதுவரை தடுத்து வைக்கப்படாத இலங்கையர்களின் எண்ணிக்கை 3065 என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்ட மற்றும் ஏனைய சவால்கள் காரணமாக அனைவரையும் உடனடியாக நாடு கடத்த முடியாது என தெரிவித்துள்ள ஐசிஈ புகலிடக் கோரிக்கைகள் காரணமாகவும் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒத்துழைக்காததன் காரணமாகவும் நாடு கடத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அனைத்து நாடுகளும் குடியுரிமை குறித்து ஆராய வேண்டும்,பயண ஆவணங்களை வழங்க வேண்டும், நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் விமானங்களை ஏற்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நாடு கடத்தியவர்களுடன் வரும் விமானங்களை ஏற்க மறுக்கும் நாடுகளையும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு பட்டியலிட்டுள்ளது எனினும் இந்த பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.

No comments:

Post a Comment